உள்ளூர் செய்திகள்

மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

Published On 2022-10-15 13:55 IST   |   Update On 2022-10-15 13:55:00 IST
  • 5 ஏக்கரில் தானிய சேமிப்புக் கிடங்கு அமைய உள்ளது
  • ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவு

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் ஊராட்சி மாங்குப்பம் கிராமத்தில் 2021-22ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வெங்கடாபுரம் சாலையோரம் 5 ஏக்கரில் தானிய சேமிப்புக் கிடங்கு, உலர்களம், கச்சாரோடு ஆகியவை அமைய உள்ளது.

மேற்கண்ட பணிகள் நடைபறுவதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத் ஐஏஎஸ் நேற்று வருவாய் துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

அப்போது, அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கிய கண்காணிப்பு அலுவலர், மேற்கண்ட பணிகள் தொடங்குவதற்கு வசதியாக இப்பகுதியில் உள்ள அரசு நிலங்களை யாரேனும் ஆக்கிரமித்து இருந்தால் அதை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் இணைந்து, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆய்வின் போது சோளிங்கர் தாசில்தார் கணேசன், காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம், பிடிஓ தண்டாயுதபாணி, ஊராட்சி மன்றத் தலைவர் அர்ஜுனன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News