உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் சேர விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அரசு பள்ளியில் சேர வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம்
- ஆங்கில வழிக் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது.
- பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் உங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி வலியுறுத்தினர்.
ஆங்கில வழிக் கல்வியும் இலவசமாக தமிழக அரசு வழங்குவதாக மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் கொடுத்து மாணவர்கள் படிப்பில் தங்குதடையின்றி படிக்க வழிவகை செய்வதாகும் எனவே தமிழக அரசு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி வீதி வீதியாக சென்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் நெமிலி சேர்மன் வடிவேலு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.