உள்ளூர் செய்திகள்

வீர, தீர செயல் விருது பெறுவதற்கு பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-11-26 15:40 IST   |   Update On 2022-11-26 15:40:00 IST
  • பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க வலியுறுத்தல்
  • கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை:

தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ந் தேதி தேசிய குழந்தை தினம் கடைபிடிக்கப்ப டுகிறது. அன்றைய தினம் வீரதீர செயல் புரிந்த 13 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது.தேசிய பெண் குழந்தை தினத்தன்று விருது பெறுவதற்கு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு இருத்தல் வேண்டும். 13 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

தகுதியுள்ள பெண் குழந்தைகள் பெயர், தாய்/ தந்தை பெயர், முகவரி, ஆதார் எண், புகைப்படம், குழந்தை ஆற்றிய அசாதாரண வீரதீர செயல் மற்றும் சாதனை ஆகியவற்றுக்கான ஆதாரங்கள், ஒரு பக்கத் துக்கு மிகாத குறிப்புகள் ஆகியவற்றுடன், "மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், ராணிப்பேட்டை" எனும் முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News