உள்ளூர் செய்திகள்
சிப்காட் தொழிற்சாலையில் கியாஸ் கசிவு
- 2 தொழிலாளர்களுக்கு தீக்காயம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் , சிப்காட் பெல் அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் , நேற்று முன்தினம் தொழிலாளர்கள் கட்டிங் மிஷின் மூலம் வேலை செய்து கொண்டி ருந்தனர் . அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த கத்தாரிகுப்பம் பகுதியை சேர்ந்த நேதாஜி ( வயது 50 ) , செங்கல்நத்தம் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் ( 37 ) ஆகிய 2 பேரும் தீக்காயம் அடைந்தனர் . உடனடியாக அவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் . இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .