இரவில் பைக் திருட்டில் ஈடுபடும் கும்பல்
- சிசிடிவி கேமராக்கள் ஆய்வு
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் பகுதியில் கடந்த 2 நாட்களில் பைக்குகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டை சேரி பகுதியைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் சங்கர் நண்பருடைய இருசக்கர வாகனம் மற்றும் காவேரிப்பாக்கம் முக்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த பார்த்திபன் என்பவருடைய இருசக்கர வாகனம் மற்றும் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள முனுசாமி என்பவருடைய இருசக்கர வாகனம் ஆகிய 3 பைக்குகளை மர்ம நபர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே இரவில் திருடி சென்றுள்ளனர்.
வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த பைக்கை காலையில் பார்த்தால் காணவில்லை. இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசில் அவர்கள் புகார் அளித்தனர். மேலும் நேற்று இரவு ஆலப்பாக்கம் வடசேரி பகுதியில் 3 பைக்குகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம ஆசாமிகளை காவேரிப்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.