உள்ளூர் செய்திகள்
- சிகிச்சைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்
- 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் போலீஸ் நிலைய வளாகத்தில் போலீசாருக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. காவேரிப்பாக்கம், அவளூர், பாணாவரம், நெமிலி, கொண்டபாளையம், சோளிங்கர், ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். பயிற்சியில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் கலந்து கொண்டார். அப்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் முன் அவருக்கு செய்யவேண்டிய சிகிச்சைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் மழைக் காலங்களில் ஆறு, குளம், ஏரி கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தவறி விழுந்து மீட்கப்படுவோருக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என விளக்கம் அளிக்கப்பட்டது.