சென்னை -பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு மீண்டும் மனு
- ஒரு சென்ட்டுக்கு ரூ.16 ஆயிரம் வழங்கியதாக புகார்
- மார்க்கெட் மதிப்பு ரூ.40 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
நெமிலி அடுத்த உளியநல்லூர் கிராமத்தைச்சேர்ந்த 64 பேரின் நிலங்கள், சென்னை பெங்களூர் - விரைவு சாலை (எக்ஸ்பிரஸ் சாலை) அமைப்பதற்காக அரசால் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டது.
அரசு வழங்கிய இழப்பீடு ஒரு சென்ட்டுக்கு ரூ.16 ஆயிரம். ஆனால் மார்க் கெட் மதிப்பு ரூ.40 ஆயிரம். ஆகவே தங்களுக்கு வழங்கிய இழப்பீடு போதவில்லை என்றும், மார்க்கெட் நிலவரப்படி பல மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நிலம் கொடுத்த விவசாயிகள் கடந்த 2018ம் ஆண்டு மனு கொடுத்தனர்.
இந்த மனுக்கள் மீது துறைரீதியாக விசாரணை நடத்த கலெக்டர் உத்தர விட்டார். மனுதாரர்கள் சார்பாக வக்கீல்களும் பல் வேறு ஆவணங்கள் வழங்கி வாதாடினர். இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 30-ம் தேதி யிட்ட கலெக்டரின் உத்த ரவில், சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலைக்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் இழப்பீடு கோரியவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய் யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டரின் இந்த உத்தரவால், தங்களுக்கு அதிக இழப்பீடு கிடைக் கும் என்று காத்திருந்த விவசாயிகள் அதிர்ச்சி யடைந்தனர். இதையடுத்து ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்றுதிரண்டு வந்த விவசாயிகள் புதிதாக மனு ஒன்றை அளித்தனர். அதில், வாழ்வாதாரமாக இருந்த நிலத்தை இழந்து வாழ வழியின்றி தவிக்கின்ற எங்களுக்கு, மனுதள்ளுபடி) அதிர்ச்சியை ஏற்படுத்து கிறது. எனவே, இப்போது கொடுக்கும் மனுவை ஏற்று மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.