உள்ளூர் செய்திகள்
போலீஸ் நிலையத்தில் டி.எஸ்.பி. திடீர் ஆய்வு
- பதிவேடுகள் சோதனை செய்யப்பட்டது
- குறைகளை கேட்டறிந்தார்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் வழக்குகள், பதிவேடுகள், போலீஸ் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, உஷா, சூரியா, சங்கர், உட்பட பலர் உடன் இருந்தனர்.