உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அமைச்சர் ஆர் காந்தி பேசிய போது எடுத்த படம்.

இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் ராணிப்பேட்டையில் நாளை ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-14 10:08 GMT   |   Update On 2022-10-14 10:08 GMT
  • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்கிறார்
  • ஏராளமானவர்கள் கலந்து கொள்கின்றனர்

ராணிப்பேட்டை:

தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏ மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம் எல் ஏ ஆகியோர் அறிவிப்பின்படி தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்து நாளை சனிக்கிழமை ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார்.

கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.சந்திரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நிர்வாகிகள் அசோகன், சுந்தரம், சிவானந்தம் உள்பட மாநில செயற்குழு பொதுக்குழு மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள், மாவட்ட இளைஞர் அணி, மாணவரணி மற்றும் ஒன்றிய நகர பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் காந்தி விடுத்துள்ள அறிக்கையில் நாளை சனிக்கிழமை காலை 9 மணியளவில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News