தி.மு.க. சுற்றுச்சூழல் அணி, தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ரத்த தான முகாம் நடந்த காட்சி.
தி.மு.க. சுற்றுச்சூழல் அணி, தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ரத்த தான முகாம்
- அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
- ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்
ராணிப்பேட்டை:
வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியின் பிறந்த நாள் முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி, தகவல் தொழில்நுட்ப அணி இணைந்து நடத்தும் ரத்த தான முகாம் இன்று ஜி.கே.மில்லேனியம் ஓட்டலில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார்.வியட்நாம் அயலக அணி அமைப்பாளர் வேதாசினிவாசன் முன்னிலை வகித்தார்.
தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் தொன்பாஸ்கோ வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரத்ததானம் முகாமை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, நகரமன்ற உறுப்பினர் வினோத், வன்னிவேடு ஊராட்சிமன்ற துணை தலைவர் பாலாஜி உள்பட சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் திமுக பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இறுதியில் ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.