உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

Published On 2023-07-20 15:06 IST   |   Update On 2023-07-20 15:06:00 IST
  • சொட்டு நீர் பாசனம் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளதை பார்வையிட்டார்
  • ராஜாகுளம் தூர்வாருதல் மற்றும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

நெமிலி:

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள கூத்தம்பாக்கம் ஊராட்சியில் நேற்று ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதிஷ் நேரில் ஆய்வுமேற்கொண்டார்.

அப்போது கூத்தம்பாக்கம் ஊராட்சி, வீரராகவபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 17 ஏக்கர் தரிசு நிலத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டு நீர் பாசனம் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளதை பார்வையிட்டார்.

தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 2021-2022 ஆம் நிதியாண்டில் ரூ.11.50 இலட்சம் மதிப்பீட்டில் ராஜாகுளம் தூர்வாருதல் மற்றும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News