பாட்டாளி இளைஞர் சங்க செயற்குழு கூட்டம்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த கும்பினிப்பேட்டை கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட இளைஞர் சங்க செயலாளரும் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவருமான கலைச்செழியன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன்,மாவட்ட தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான அ.மா.கிருஷ்ணன், மாநில இளைஞர் சங்க செயலாளர் தீனதயாளன், மாணவர் சங்கம் மாநிலச் செயலாளர் பிரபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
வருகின்ற மே 5-ந் தேதி சித்திரை திருவிழாவின் போது அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் வன்னியர் சங்க மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக ஐம்பதாயிரம் இளைஞர்கள் கலந்து கொள்ள சங்க கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.
சித்தேரி ஊராட்சியில் இயங்கும் அல்ட்ராடெக் தனியார் சிமெண்டு நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட இளைஞர் சங்க தலைவர் சாரதி, பாட்டாளி சங்கம் மாவட்ட தலைவர் ஏழுமலை,மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர்கள் தனசேகர், ராமன், ஜெகன், ஷோபன் பாபு, அன்பு மற்றும் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட இளைஞர் சங்க துணைச் செயலாளர் வி.விஜி நன்றியுரை கூறினார்.