உள்ளூர் செய்திகள்

காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

Published On 2023-10-06 14:40 IST   |   Update On 2023-10-06 14:40:00 IST
  • பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை
  • பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்

காவேரிப்பாக்கம்:-

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று காலை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கோப்புகளை சரிவர பராமரிக்க வேண்டும் பொதுமக்களிடம் வரும் புகார்களை விரைவாக முடிக்க வேண்டும் எந்தவித புகார்களை நிலுவையில் வைக்கக்கூடாது போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்.

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும், போலீஸ் நிலையத்தையும் மற்றும் வளாகத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது ஏ.டி.எஸ்.பி விஸ்வேஸ்வரய்யா, அரக்கோணம் டி.எஸ்.பி.ரவிச்சந்திரன், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அருள்மொழி, எஸ்.எஸ்.ஐ பிச்சாண்டி உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

Similar News