உள்ளூர் செய்திகள்

சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடக்கம்

Published On 2023-08-06 12:59 IST   |   Update On 2023-08-06 12:59:00 IST
  • எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு
  • பூமி பூஜையுடன் நடந்தது

சோளிங்கர்:

சோளிங்கரை அடுத்த போலிப்பாக்கம் கிராமத்தில் சிமெண்டு சாலை அமைக்க முனிரத்தினம் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் ஒதுக்கினார்.

அந்த நிதியின்கீழ் சிமெண்டு சாலை அமைக்கும் தொடக்க நிகழ்ச்சி திரவுபதி அம்மன் கோவில் அருகில் பூமி பூஜையுடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் இ.செல்வம் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கார்த்திக், நிர்வாகிகள் ஆறுமுகம், பார்த்திபன், கடிகாசலம் பாரதி, ரவி, முரளிதரன், பரந்தாமன், பாக்யராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News