உள்ளூர் செய்திகள்

அரக்கோணத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி நிறைவு

Published On 2023-01-22 15:00 IST   |   Update On 2023-01-22 15:00:00 IST
  • வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு
  • அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

அரக்கோணம்:

அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 5-வது பேட்ச் 273 ஆண் மற்றும் 17 பெண் உதவி சப்-இன்ஸ்பெக் டர்கள் என 290 பேருக்கு 26 வார பயிற்சி நடைபெற்றது.

அதேபோல் 46-வது பேட்சில்

296 ஆண் மற்றும் 32 பெண்கள் என 328 காவலர்களுக்கு 43 வாரங்கள் பயிற்சி நடந்தது. இதன் நிறைவு விழா பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய முதல்வரும் டி.ஐ.ஜி.யுமான சாந்தி ஜி.ஜெய்தேவ் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை, ஏற்றுக் கொண்டு வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் வீரர், வீராங்க னைகளின் பல்வேறு வீரதீர செயல்கள், சாகசங்கள் நடை பெற்றன. நிகழ்ச்சியில் அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் பயிற்சி மைய துணை முதல்வர் கவு ரவ் தோமர் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News