பா.ஜ.க. நிர்வாகி மீது தாக்குதல்
- தகராறில் ஈடுபட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அடுத்த சென்னசமுத்திரம் அருகே உள்ள மலைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (36) ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. ஒ.பி.சி. அணி பொது செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இவர் மினரல் வாட்டர் கேன்களை கடை கடையாக சப்ளை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் மதியம் வாணியன் சத்திரம் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டி கடையில் மினரல் வாட்டர் கேன்களை இறக்கி கொண்டு இருந்த போது போதையில் அங்கிருந்த கடப்பேரி காலனி பகுதியை சேர்ந்த கோபி (27), சிலம்பரசன் (29) மற்றும் சிலர் பார்த்திபனிடம் வாய் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.
தாக்குதலில் காயம் அடைந்த பார்த்திபனை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து பார்த்திபன் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.