உள்ளூர் செய்திகள்

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-06-24 13:23 IST   |   Update On 2023-06-24 13:23:00 IST
  • போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது
  • மாலை 7 மணிக்கு மேல் பொருட்களை இறக்குவது குறித்து ஆலோசனை

நெமிலி:

ராணிப்பேட்டைமாவட்டம்,காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தீபிகா முருகன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் பள்ளி, கல்லூரி அலுவலக வேலை நேரங்களான காலை 8 முதல் 11 மணிவரையிலும் மற்றும் மாலை 4 முதல் 7 மணி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

ஆதலால் வணிக பொருட்களை ஏற்றிவரும் லாரிகளுக்கு போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள நேரங்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மற்றும் மாலை 7 மணிக்கு மேல் பொருட்களை இறக்குதல் பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், போலீசார்,வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News