உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2022-12-03 14:24 IST   |   Update On 2022-12-03 14:24:00 IST
  • பிரசார உறுதிமொழி ஏற்றனர்
  • மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்

சோளிங்கர்:

சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின வன்முறை தவிர்ப்பதற்கான பிரசார உறுதிமொழி மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வட்டார இயக்க மேலாளர் அலமேலு தலைமை யில் நடந்தது.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனசேகரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வளப்ப யிற்றுநர் சாந்தி வரவேற்றார். இதில் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார் கலந்துகொண்டு பாலின வன்முறை தவிர்ப்பதற்கான பிரசார உறுதிமொழி ஏற்றார்.

தொடர்ந்து அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் பெண் களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, குழந்தை திருமணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதி ரான அச்சுறுத்தல், வன்முறைகள் குறித்து கோஷங்கள் எழுப்பி, துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்ப டுத்தினார்கள். 

Tags:    

Similar News