உள்ளூர் செய்திகள்
பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர்
- பலத்த மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- அதிநவீன மீட்பு கருவிகளுடன் சென்றனர்
அரக்கோணம்:
கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடை விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணி யில் ஈடுபடுவதற்காக கேரள மாநில நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்ப கேட்டுக்கொண்டுள்ளது.
அதை தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் உத்தரவின் பேரில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து வயநாடு, பத்தினம்திட்டா, மலப்புரம், கன்னூர், கோட்டயம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய பகுதிகளுக்கு பேரிடர் மீட்புப்படை வீரர்கள் அதிநவீன மீட்பு கருவிகளுடன் மீட்புப்படை வாகனத்தில் சென்றனர்.