உள்ளூர் செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லம் அமைத்திட விண்ணப்பிக்கலாம்
- வருகிற 26-ந் தேதி கடைசி நாள்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து புதியதாக தோற்று விக்கப்பட்ட ராணி ப்பேட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை.
தற்போது ராணி ப்பேட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்ப ட்டோருக்கான இல்லம் அமைத்திட விருப்பமுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த விண்ணப்பத்தை ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், தொலைபேசி எண்: 04172-274177 என்ற முகவரியில் வருகிற 26-ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ராணிப்பே ட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் தெரிவித்துள்ளார்.