உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்த போது எடுத்த படம். 

ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம்

Published On 2022-09-02 15:29 IST   |   Update On 2022-09-02 15:29:00 IST
  • அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கிவைத்து வாகனத்தை பார்வையிட்டு தாய்மார்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத், ஊராட்சிமன்ற தலைவர் ஏ.கே.முருகன், நகர செயலாளர் பூங்காவனம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News