உள்ளூர் செய்திகள்

வன்னிவேடு ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை பொறியியல் துறை விரிவாக்க மைய புதிய கட்டிடத்தினை அமைச்சர் ஆர்.காந்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த போது எடுத்த படம். 

வாலாஜா அடுத்த வன்னிவேடு ஊராட்சியில் வேளாண் விரிவாக்க மைய கட்டிடம்

Published On 2022-11-29 14:46 IST   |   Update On 2022-11-29 14:46:00 IST
  • ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டது
  • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்

வாலாஜா:

வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு நவீன எந்திரங்கள், உழவு கருவிகள், அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இத்துறையின் புதிய அலுவலக கட்டிடம் வன்னிவேடு ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் காந்தி கலந்து கொண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வேளாண்மை பொறியியல் துறையின் அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தார்.

இதனைத் தொடந்து அனந்தலையைச் சேர்ந்த 2 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்திற்கான ஆணையினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

புதிய வேளாண்மை பொறியியல் துறை விரிவாக்க மைய அலுவலக கட்டிடத்தில் உதவி செயற் பொறியாளர் அலுவலகம் மற்றும் உதவி பொறியாளர் இளநிலை பொறியாளர் அலுவலகங்களும் செயல்படும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நவீன வேளாண் எந்திரங்கள் பெற்றிட அலுவலகத்தினை அணுகலாம். மேலும் அலுவலகம் வாயிலாக வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு மண் அள்ளும் எந்திரம் மற்றும் டிராக்டர்கள் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது. இதனையும் இவ்வலுவலகத்தினை விவசாயிகள் அணுகி பயனடையலாம்.

Tags:    

Similar News