உள்ளூர் செய்திகள்

ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

Published On 2023-05-15 15:12 IST   |   Update On 2023-05-15 15:12:00 IST
  • 4 கிலோ பறிமுதல்
  • திரிபுரா மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு கடத்தினார்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவில் வாலாஜா ரோடு ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

அப்போது ரெயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர் .

விசாரணையில் அந்த வாலிபர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ரூசன் அலி (27)என்பதும், இவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவரிடம் சோதனை செய்தபோது 4 கிலோ கஞ்சா பொட்ட லங்களை திரிபுரா மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்துள்ளது.

இதையடுத்து கலால் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூஷன்அலியை கைது செய்து கஞ்சா பொட்ட லங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News