உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான மினி வேனை படத்தில் காணலாம்.

கோழிகளை ஏற்றி சென்ற மினிவேன் மீது பஸ் மோதி விபத்து

Published On 2023-04-11 14:28 IST   |   Update On 2023-04-11 14:28:00 IST
  • 12 பேர் படுகாயம்
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

வாலாஜாப்பேட்டை அடுத்த கடப்பந்தாங்கல் அருகே, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கோழிகளை ஏற்றி கொண்டு லோடு ஆட்டோ இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.

அப்போது செல்போன் தொழிற்சாலைக்கு செல்வதற்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று ஆட்டோ பின்னால் வந்து கொண்டிருந்தது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்ஸில் பயணம் செய்த 12 பேர் லேசான காயம் அடைந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு

வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News