உள்ளூர் செய்திகள்

சிதலமடைந்த நிலையில் கிடக்கும் கோவில்.

சிதிலமடைந்து கிடக்கும் கோவில்

Published On 2022-08-17 15:01 IST   |   Update On 2022-08-17 15:01:00 IST
  • கருவறைக்குள் கரையான் புற்றுக்கள் ஆக்கிரமிப்பு
  • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் காவே ரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.

இது பல வருடங்களாக பூஜைகள் எதுவும் செய்யாமல் பயன்பாடற்ற நிலையில் கோவில் சுவர்களில் மரம் வளர்ந்து பெரிய மரம் போல காட்சியளிக்கிறது மேலும் கோவில் கருவறைக்குள் கரையான் புற்றுக்கள் ஏராளமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

கோவில் கருவறைக்கு உள்ள சிலை சிதிலமடைந்து காணப்படுகிறது.

எனவே சிதிலமடைந்து கிடக்கும் கோவிலை புனரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வழிபாடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News