உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையம் எதிரே பள்ளத்தில் இறங்கி இறங்கிய வேன்.

சரக்கு வாகனம் பள்ளத்தில் சிக்கி விபத்து

Published On 2022-09-12 15:16 IST   |   Update On 2022-09-12 15:16:00 IST
  • காவேரிப்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
  • பொக்லைன் எந்திரத்தை கொண்டு அப்புறப்படுத்தினர்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து நகர பகுதிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள போலீஸ் நிலையம் எதிரே சாலை விரிவாக்க பணிகளுக்காக எடுக்கப்பட்டிருந்த பைப்லைன் பள்ளத்தில் அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் எதிர்ப்பாராத விதமாக சிக்கியது.

இதனால் காவேரிப்பாக்கம் பாணாவரம் சாலையில் செல்ல வாகனங்களுக்கு இடையூறாக இருந்ததால் காவேரிப்பாக்கம் மற்றும் பாணாவரம் சோளிங்கர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சிறிய விபத்தால் அரை மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரத்தை கொண்டு அந்த வாகனத்தை அப்புறப்படுத்தினர்.

Tags:    

Similar News