மருத்துவ படிப்பிற்கு தேர்வு பெற்ற மாணவர்கள் கலெக்டர் வளர்மதியிடம் வாழ்த்து பெற்ற காட்சி.
7.5. சதவீத இட ஒதுக்கீட்டில் 16 பேர் மருத்துவ படிப்பிற்கு தேர்வு
- இரு மையங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது
- கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023 ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் மாவட்ட கலெக்டர் வழிகாட்டு தலின்படியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஆலோசனை படியும் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பனப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி ஆகிய இரு மையங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த மையங்கங்களில் நீட் தேர்வு பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 12 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கும், 4 மாணவர்கள் பி.டி.எஸ் படிப்பிற்கும் என மொத்தம் 16 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு கலெக்டர் வளர்மதி புத்தகங்கள் வழங்கி பராட்டினார்.
அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட போட்டித்தேர்வு ஒருங்கிணை ப்பாளர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.