காரில் குட்கா கடத்தியவர் உள்பட 5 பேர் கைது
- ரோந்து பணியில் சிக்கினர்
- பணம் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல்
நெமிலி:
காவரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் மற்றும் போலீசார் நேற்று இரவு, வாணியன்சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பேராராம் (வயது 38) என்பதும், இவர் காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்ய குட்காவை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 164 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் குட்கா சப்ைள செய்ய உடந்தையாக இருந்த காவேரி ப்பாக்கத்தை சேர்ந்த அக்பர் பாஷா(49), நெடும்புலி கிராமத்தை சேர்ந்த செல்வம் (29), புதுப்பட்டை சேர்ந்த ஹரிதாசன்(38), ஜாகீர்தண்டலம் பகுதியை சேர்ந்த கோபி(29) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள வாலாஜாவை சேர்ந்த கல்லுராம், பனப்பாக்கத்தை சேர்ந்த பாரதிராஜா ஆகியோரை தேடி வருகின்றனர்.