உள்ளூர் செய்திகள்

மூலவர் தன்வந்திரி பெருமாள் துளசி மாலை, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடந்த போது எடுத்த படம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்

Published On 2023-01-01 14:51 IST   |   Update On 2023-01-01 14:51:00 IST
  • வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
  • பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது

வாலாஜா:

வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.அதன்படி கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், திருஷ்டி, எதிரிகள் பயம் விலக மஹா சுதர்சன ஹோமம், ஆயுள்பயம் நீங்க ஆயுஷ் ஹோமம், உடல் நோய், மன நோய் விலக மஹா தன்வந்திரி ஹோமம், வாழ்வில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம் ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.புத்தாண்டை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு துளசி மாலை, வண்ண மலர்கள் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு தொடர் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. ஹோமங்களில் கலந்து கொண்டவர்களுக்கு விசேஷ ஹோம பிரசாதங்களை பீடாதிபதி ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் வழங்கி வாழ்த்தினார். நாளை 2-ம்தேதி திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது.

முன்னதாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News