பெல் ஊழியர் வீட்டில் திருடிய 2 பேரை மற்றும் போலீசாரை படத்தில் காணலாம்.
பெல் ஊழியர் வீட்டில் திருடிய மேலும் 2 பேர் கைது
- 7 பவுன் நகை பறிமுதல்
- ஜெயிலில் அடைப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த சீக்கராஜ புரம் அவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரன் (வயது38). பெல் தொழிற்சாலை ஊழியர்.
இவர் கடந்த 8-ந் தேதி சென்னையில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் மறுநாள் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவிலிருந்த 9 பவுன் நகைகள் கும்பல் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக மகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பெல் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சங்கீத்குமார்(28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிட மிருந்து ரூ.2லட்சத்து40 ஆயிரம் மதிப்பிலான 7 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதே திருட்டு வழக்கில் தொடர்புடைய நரசிங்கபுரம், பெல் சூர்யா நகர் பகுதியை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன்(31), ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி(25) ஆகிய இருவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமி ருந்து 2 பவுன் நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.