உள்ளூர் செய்திகள்


ராமநாதபுரத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தேசிய கொடி ஏற்றி வைத்து பலூன்களை பறக்க விட்டார்.




ரூ.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ்

Published On 2022-08-15 09:02 GMT   |   Update On 2022-08-15 09:02 GMT
  • 75-வது சுதந்திர தின விழாவில் ரூ.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் வழங்கினார்.
  • அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

ராமநாதபுரம்

75-வது சுதந்திர தின விழாவை கொண்டாட ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு இன்று காலை கோலாகலமாக நடந்தது. ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து மூவர்ண பலூன் பறக்க விட்டு, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சமாதான புறாக்களை பறக்க விட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

காவல்துறையை சேர்ந்த 45 பேருக்கும், வருவாய்த்துறை, சமூக ஆர்வலர்கள் மாவட்ட அளவிலான துறை தலைவர்களுக்கான நற்சான்றிதழ் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் உள்பட 11 பேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 158 அலுவலர்களுக்கும், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் ஆகியோர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, முன்னாள் படை வீரர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழிட மேம்பாட்டு வாரியம், கலை பண்பாட்டுத் துறைகளின் சார்பில் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரங்கள், சலவைப்பெட்டிகள், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை என மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 81 ஆயிரத்து 451 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

மாணவ- மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை) பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், தாசில்தார் முருகேசன் உள்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News