உள்ளூர் செய்திகள்

மனு அளித்த போது எடுத்த படம்.

வந்தே பாரத் ரெயில்களை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும்

Published On 2023-10-14 09:25 GMT   |   Update On 2023-10-14 09:25 GMT
  • வந்தே பாரத் ரெயில்களை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும்.
  • தர்மர் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.

பரமக்குடி

அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் பரமக்கு டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும் நாடு முழுவதும் 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரெயில்களையும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 ரெயில்க ளையும் இயக்க இந்திய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தியா வின் புண்ணிய தலங்களில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் ராமேசுவரம் விளங்கி வருகிறது.

நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு ராமேசு வரத்திற்கு தேவையான அளவு போக்குவரத்து வசதிகள் இல்லை. அகலப் பாதை மாற்றத்தால் ராமே சுவரம்-கோயம்புத்தூர், ராமேசுவரம்-பாலக்காடு, ராமேசுவரம்-மதுரை மற்றும் சில பிரபலமான ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இங்கு வரும் பக்தர்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் வியாபாரிகள், தொழி லாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளா கின்றனர். ஆகவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ரெயில்களை ராமேசுவரம் வரை ரெயில்வே நிர்வாகம் நீட்டிப்பு செய்ய வேண்டும்.

மேலும் இடைநிறுத்தப் பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். இது குறித்து ரெயில்வே முதன்மை நிர்வாக இயக்குனர் தேவேந்திர குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News