உள்ளூர் செய்திகள்

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் லாந்தை கிராம மக்கள் மனு அளித்த காட்சி.

லாந்தை ெரயில்வே சுரங்கப்பாதையை மேம்பாலமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்-பொதுமக்கள் மனு

Published On 2023-11-19 12:40 IST   |   Update On 2023-11-19 12:40:00 IST
  • லாந்தை ெரயில்வே சுரங்கப்பாதையை மேம்பாலமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை அளித்தனர்.
  • மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதாரா மன் வருகை தந்தார். அப்போது திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் லாந்தை கிராம பொதுமக்கள் சார்பில் கிராம தலைவர் தங்கவேல் அளித்த கோரிக்கை மனுவில் கூறியி ருந்ததாவது:-

லாந்தை, கண்ணணை, பெரியதாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திருப்பனை என ஐந்து கிராமங்களை உள்ளடக்கி, சுமார் 600 குடும்பங்களைக் கொண்ட 2,500-க்கும் மேற் பட்ட மக்கள் பயன்படுத்தும் இந்த ஒரு வழிச் சாலையில் தான் தற்போது ெரயில்வே சுரங்கப்பாதை அமைய பெற்றி ருக்கிறது. இந்த கிராமங்களை நகரத்துடன் இணைக்க வேறு எந்த பாதையும் இல்லை.

மேலும் மேற்கில் 6 கி.மீ. தூரத்திலும், வடமேற்கில் 10 கி.மீ. தூரத்திற்கு அப்பாலும் தெற்கில் 7 கி.மீ. அளவில் இருந்து கிழக்கு நோக்கி வரும் மழை நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயின் தென்கலுங்குக்கு சென்று கடலில் கலக்கும் ஆற்று வழித்தடக் கால்வாயை மறைத்து தான் தடுப்பணை போல தான் இந்த சுரங்கப் பாதை அமைந்திருக்கிறது.

ெரயில்வே தண்டவாளத் தின் இருபுறமும் வரும் உபரிநீர் நேராக சென்று கடலில் கலப் பதை தடுக்கும் விதமாக தடுப் பணை போல் இந்த பாலம் அமைந்துள்ளது. பாலத் தின் இரு முகப்புகளும் இரு வாக னங்கன் ஒன்றாக ஒரே நேரத் தில் கடந்து செல்ல இயலாத வகையில் குறுகலாக அதாவது வெறும் 15 அடியிலிருந்து 20 அடி தான் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படு கிறது. தேசிய நெடுஞ்சா லைக்கும், ெரயில்வே தண்டவா ளத்திற்கும் இடையே மிக குறைந்த 30 மீட்டருக்குள் தூரம் இருப்பதால் மேற்கில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் அங்கேயே தேங்கி விடுகிறது. இதனால் சுரங்கப்பாதையில் இருந்து 100 மீ. தூரத்திற்கு மற்றும் இருக்கும் மெக்கா நகர் 60 வீடுகளும், செய்யது அம் மாள் பொறியியல் கல்லூரியும் நீரில் மிதக்கிறது.

மேற்கண்ட ஐந்து கிராமங் களை சுற்றிலும் கிழக்கில் பெரிய கண்மாய் கலுங்கும், தெற்கில் திருப்பனை கண்மாய், மேற்கில் லாந்தை கண்மாய் கலுங்கின் ஆற்று கால்வாயும் மற்றொரு தெற்குப் பகுதியில், பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி கண்மாயிகளும், வடக்கில் ராமநாதபுரம் பெரிய கண்மாய் அமைந்திருப்பதால் மாற்று வழித்தடமோ, சாலையோ இல்லை. எனவே இந்த சுரங் கப்பாதையில் தான் பள்ளி வாகனங்கள், டெம்போக்கள், ஆட்டோ, விவசாய பொருட் களை எடுத்துச் செல்லும் லாரி கள், இருசக்கர வாகனங் கள், அவசரத் தேவைக்கு ஆம்பு லன்ஸ், நகரப்பேருந்து என இந்த வழியில் தான் செல்கிறது.

சிறிய மழை பெய்தால்கூட சுற்றியுள்ள அனைத்து வழித–டங்களில் இருந்தும் தண்ணீர் வந்து சுரங்கப்பாதைக்குள் தேங்குவதால் மழைநீரை வெளியேற்ற 6 மணி முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. அதுவரை இருசக்கர வாகனம் உட்பட எந்தவித போக்குவரத்து இல்லாமல் ஊருக்குள்ளேயே அந்த பகுதி மக்கள் முடங்கும் நிலை உள்ளது. மேலும் 7 கீ.மீ தொலைவில் உள்ள ராமநாத புரம் நகரத்திற்கும் பிற ஊர்க ளுக்கும் செல்ல முடியாமல் எவ்வித தொடர்பின்றி தீவு போல ஆகிவிடுகிறது.

பிற மாவட்டங்களை போல இல்லாமல் பூலோக ரீதியாக கடற்கரை பகுதி என்பதாலும் அனைத்து கண்மாய்களின் உபரிநீர் வந்து சேரும் கடைநிலைப் பகுதியாக இருப்பதாலும் பாலம் அமைந்து இருப்பது தாழ்வாகவும் அதன் தண்ணீர் வெளியேரும் பகுதி உயர்வாக இருப்பதாலும் பெரிய கண்மாய் கலுங்கு திறந்தால் பாலத்தை முழ்கடிக் கும் அளவுக்கு தண்ணீர் வரும் பகுதி என்பதாலும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தண் ணீரை வெளியேற்ற இயல வில்லை.தொடர்ந்து மேற்கண்ட கிராம மக்கள் பெரும் துயரங்க ளையும், துன்பங்களை யும் சந்தித்து வருவதால் அன்றாட வாழ்க்கையே பெரும் பாதிப் புக்கு உள்ளாகிறது.

மேலும் நெடுஞ்சாலைத் துறை நான்குவழி சாலை அமைக்க இந்த பாலம் அமைந்து இருக்கும் பகுதியை யும் கையகபடுத்தி உள்ளார்கள். அதனை தொடர்ந்து இந்த பாலத்திற்கு நேரே உள்ள லாந்தை காலணி பகுதியில் உள்ள 30 வீடுகளையும் கைய கப்படுத்தி உள்ளனர். இதனால் இந்த மக்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாக உள்ளது. இவ்வாறு கையகப்படுத்தி உள்ளதால் எதிர்காலத்தில் நான்குவழி சாலை வந்தால் இந்த பாலத்திலிருந்து கிராம மக்கள் வெளியேரும் பொழுது விபத்து ஏற்படும் பகுதியாக மாறும் சூழல் உள்ளது.எனவே சமூகம் தயவு கூர்ந்து இப்பி ரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்தி சுரங்கபா தைக்கு மாற்றாக ஆள் உள்ள கேட்டா கவோ அல்லது மேம்பாலமா கவோ தரம் உயர்த்தி கொடுத்து பெரும்பான்மையாக விவசாய பெருங்குடி மக்கள் மட்டுமே வாழ்ந்து வரும் இப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு அளித்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில சேவா துணைத்தலைவர் பிரபாவதி, விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் முகவை சிவா (எ) சிவசாமி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

Tags:    

Similar News