கைதான விக்னேசுவரன்
பெண்ணிடம் ரகளை செய்த வாலிபர் கைது
- தொண்டி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் ரகளை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- இவர் ராமநாதபுரம் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூர் புதுப்பையூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள திருவெற்றியூர் புதுப்பையூரை சேர்ந்தவர் இளையராஜா. இந்து மக்கள் நல இயக்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவராக உள்ளார். இவரது மனைவி சசிகலா (27). சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி வீட்டில் தூங்கினர். மாமனார்- மாமியார் திண்ணையில் உறங்கினர்.
நள்ளிரவில் அதே ஊரைச் சேர்ந்த வல்மீகம் மகன் விக்னேசுவரன் இளையராஜா வீட்டு கதவை உடைத்து சசிகலாவிடம் ரகளை செய்தார். சசிகலா உள்பட வீட்டில் உள்ளவர்கள் கூச்சலிடவே விக்னேசுவரன் வீட்டின் பின்புறமாக ஓடி தப்பி விட்டார்.
இதுகுறித்து சசிகலா தொண்டி போலீசில் புகார் செய்தார். முன் விரோதம் காரணமாக விக்னேசுவரன் இளையராஜா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது. இந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்பாஸ்கர் விக்னேசுவரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நீதிபதி அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.