ஊழியர் வீட்டில் நகை-பணம் பறிமுதல்
- பரமக்குடி ஊழியர் வீட்டில் 210 பவுன் நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள முத்து செல்லாபுரத்தை சேர்ந்தவர் அகஸ்டின் (வயது35). இவர் சென்னை யில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கா ளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அவர் தான் பணியாற்றிய நிறுவனத்தில் ரூ. 5 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து அந்த நிறுவனம் சார்பில் மாநில குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அகஸ்டினின் நடவ டிக்கைகளை கண்காணித்து வந்தனர்.சில வாரங்களுக்கு முன்பு அவர் மதுரை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள நகைக்கடைகளில் நகை வாங்கியிருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாநில குற்றப்பிரிவு போலீசார் பரமக்குடி காமராஜர் தெருவில் உள்ள அகஸ்டின் வீட்டிலும், மேல காவனூர் கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டிலும் விடிய, விடிய சோதனை நடத்தினர்.
அப்போது 2 வீட்டிலும் மொத்தம் 210 பவுன் நகை, ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. நகை, பணம் எப்படி வாங்கப்பட்டது என்ற ஆவணங்கள் இல்லை. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அகஸ்டினின் உறவினர்க ளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ரூ. 5 கோடி மோசடி செய்து பரமக்குடி வாலிபர் நகைகளை வாங்கி குவித்த சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.