உள்ளூர் செய்திகள்
ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாடு
- ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாடு நடந்தது.
- மதுரை மண்டல சமூக ஊடக அணி பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சந்தை திடல் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பாராளுமன்ற தொகுதி மாநாடு நடந்தது. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும்,தமிழக மீனவர்கள் நலனை பாதுகாக்கவும், அழிந்துவரும் விவசாயத் தொழிலை மீட்டெடுக்கவும், பனைத்தொழிலை பாதுகாக்கவும், தொழில்வளத்தை அதிகப்படுத்தக் கோரியும் இந்த மாநாடு நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமை தாங்கினார். மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல்ஜமீல் வரவேற்றார். மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சுபீர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை மண்டல சமூக ஊடக அணி பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார்.