உள்ளூர் செய்திகள்

பச்சைக்கிளிகளை கூண்டில் அடைத்து வளர்த்த பள்ளிக்கு அபராதம்

Published On 2023-10-14 14:56 IST   |   Update On 2023-10-14 14:56:00 IST
  • பச்சைக்கிளிகளை கூண்டில் அடைத்து வளர்த்த தனியார் பள்ளிக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • பிடிபட்ட 5 பச்சை கிளிகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்கள்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் வனத்துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வை தொடர்ந்து, வன உயிரி னங்களை வளர்ப்பதும் மற்றும் அவற்றிற்கு உணவ ளிப்பதும் குற்றம் என்பதை உணர்ந்து பொதுக்கள் பலர் பச்சைக்கிளிகளை வனத்துறையில் ஒப்படைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் வனத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி. ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஆணையின் படி, ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் மற்றும் வனப் பணியாளர்கள் குழுவாக சென்று ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சோதனை மேற்கொண்ட போது வன உயிரினப் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாதுகாக்கப்பட்ட வன உயிரினமான பச்சைக் கிளிகள் 5 கூண்டில் அடைத்து வைத்திருந்தனர்.

பச்சை கிளிகளை வளர்த்து வந்த சம்பந்தப் பட்ட பள்ளிக்கு ராமநாத புரம் மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி ரூ.75 ஆயிரம் இணக் கட்டணமாக விதிக்கப் பட்டது. பிடிபட்ட 5 பச்சை கிளிகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News