உள்ளூர் செய்திகள்

பாம்பன் நுழைவுப்பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள்.

பாம்பன் நுழைவுப்பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

Published On 2022-11-15 07:44 GMT   |   Update On 2022-11-15 07:44 GMT
  • பாம்பன் நுழைவுப்பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • பாறாங்கற்களில் சரிவு ஏற்பட்டு பாலம் சேதமடைய வாய்ப்புள்ளது.

ராமேசுவரம்

ராமேசுவரம் தீவையும் மண்டப பகுதியையும் இணைக்கும் வகையில் கடல் பரப்பில் 2.5 கி.மீட்டர் தூரத்திற்கு சாலை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தில் 2 புறமும் தொடங்கும் பகுதியில் கருவேல மரங்கள் அதிகமாக காணப்படுகிறது.

இந்த மரங்கள் சாலைக்கு பாதுகாப்பாக பாறாங்கற்களால் அமைக்கப்பட்டுள்ள சரிவு பகுதிகளில் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனால் பாறாங்கற்களில் சரிவு ஏற்பட்டு பாலம் சேதமடைய வாய்ப்புள்ளது.

இந்த கருவேல மரங்களால் சாலை பாலத்தில் இரு புறமும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் நுழையும்போது அழகு மிகுந்த நீண்ட பரப்புடைய கடல் பகுதியையும், கடலில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் தண்டவாளத்தையும், கடலில் அமைக்கப்பட்டுள்ள வளைவான சாலை பாலத்தையும், ரெயில் செல்லும் அழகையும் ரசிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

சாலை விபத்தை தவிர்க்கும் வகையில் இந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News