உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசிய காட்சி. அருகில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, ராஜகண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, மனோ தங்கராஜ், ரகுபதி, மெய்யநாதன், கீதா ஜீவன், கனிமொழி எம்.பி., காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர். 

மக்கள் நலனில் அக்கறையில்லாத பிரதமர் மோடி-உள்துறை மந்திரி தி.மு.க.வை விமர்சிக்கின்றனர்

Published On 2023-08-18 12:46 IST   |   Update On 2023-08-18 13:24:00 IST
  • மக்கள் நலனில் அக்கறையில்லாத பிரதமர் மோடிஎன்று உள்துறை மந்திரி தி.மு.க.வை விமர்சிக்கின்றனர்.
  • ராமநாதபுரம் பயிற்சி பாசறை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆேவசமாக பேசினார்.

மண்டபம்

ராமநாதபுரத்தை அடுத்த பேராவூரில் தி.மு.க. தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நிர்வாக ரீதியிலான 19 மாவட்டங்களை சேர்ந்த 16,928 பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதா வது:-

வறட்சியான மாவட்டம் என்று கூறப்பட்ட ராமநாதபு ரத்திற்கு நாள் உள்ளாட் சித்துறை அமைச்சராக இருந்த போது போதிய தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்தேன். அப் பேற்பட்ட ராமநாதபுரம் மண்ணில் இன்று கழக வீரர்களாக கூடியுள்ளோம். சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கும், தேச வளர்ச் சிக்கும் ஆற்றிய பங்கு மறைக்க முடியாதது.

தாய் மண்ணை காக்கும் போரில் இருந்த மன்னர் ராமநாதசேதுபதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபடி மக்களை எழுச் சியை ஊட்டினார். மன்ன–ரின் கட்டளையை மனதில் வைத்து 42 நாட்கள் பெரும் போரை மக்கள் செய்தனர். சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை–யில் உள்ள தனிமை சிறை–யில் அவரை பிரிட்டீஷ் அரசு அடைத்தது. நாட்டுக் காக அவர் ஆற்றிய தியா கத்தை நினைவுகூர, ராமநா தபுரம் கலெக்டர் அலுவல கத்துக்கு சேதுபதி மன்னர் பெயரை வைத்தவர், தலை வர் கருணாநிதி.

அண்ணா அரசு என்ஜினீ யரிங் கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுனாமியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு 5 ஆயிரம் சுனாமி குடியிருப்புகள், மேல்மட்ட பாலங்கள் என திட்டங்களை தந்தோம். பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரம் முன்னுக்கு கொண்டு வரப்பட்டது. ராமநாதசுவாமி கோவிலின் தங்கத்தேரை ஓடவைத்தது இந்த ஆட்சிதான்.

தென்மண்டல முகவர் கூட்டம் என்றவுடன் ராமநாதபுரத்தில் நடத்தலாம் என்று ஒட்டுமொத்தமாக தீர்மானிக்கப்பட்டது. இந்த நிகழ்ச் சியை மிகுந்த எழுச்சி யோடு ஏற்பாடு செய்துள்ளனர். அமைச்சர் ராஜகண்ணப் பன், காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகி யோர் போட்டி போட்டு இந்த மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல் கின்றனர்.

தமிழகத்தை தி.மு.க.தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற தலைவர் கலைஞரின் கனவை நிறைவேற்றுவோம். அதற்கான தளபதிகள்தான் நீங்கள். தென்மாவட்ட பொறுப்பாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி தற் போது வழங்கப்பட்டது. வாக்குச்சாவடியின் முகவர் கள்தான் வாக்காளர்களுக்கு முழுப்பொறுப்பு. நாடாளு மன்ற தேர்தலில் 40 தொகு திகளிலும் வெற்றி ஒன் றையே இலக்காக கொண்டு இன்று முதல் பணியாற்ற வேண்டும். வாக்காளர்களி டம் நமது சாதனைகளை தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும்.

வாக்குச்சாவடிக்கு உள்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களாக நீங்கள் மாற வேண்டும். இதற்காக தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும். அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண் டும். விடியல் பயணம் என பெண்களுக்கான இலவச பயணத்துக்கு பெயர் வைக் கப்பட்டுள்ளது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. நமக்கு எதிராக அவதூறு, பொய் பிரசாரம் செய்யும் சிறுநரிக்கூட்டம் ஒன்று செயல்பட்டு வருகி றது.

அ.தி.மு.க., பா.ஜ.க. செய்வதை போல பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். நமது சாதனைகளை மட்டும் சொன்னால் போதும். நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி முழுமையாக வெற்றி பெற வேண்டும். தற்போது ஆட்சி–யில் உள்ள பா.ஜ.க. நாட்டை சின்னாபின்னமாக்கி விட் டது. மீண்டும் ஒரு முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.

பதவிக்கு வரும் முன் மோடி பல வாக்குறுதிகளை கொடுத்தார். ராமநாதபுரத் திலும் கூட்டம் நடத்தி வாக் குறுதிகள் கொடுத்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி கருப்பு பணத்தை ஒழித்து ஆளுக்கு ரூ.15 லட்சம் கொடுத்தார் களா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுத் தாரா?

இதில் ராமநாதபுரத்தில் அவர் போட்டியிட போகி றார் என்கின்றனர். ராமேசு வரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்று வோம் என்றார். பாதாள சாக்கடை பணிகளை தவிர எதுவும் நடக்கவில்லை. அதையும் அ.தி.மு.க. ஆட்சியில் முழுமையாக செய்ய வில்லை. புயலால் அழிந்து போன ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை திட்டத்தை கொண்டு வரு வோம் என்றார். இது வரை எதுவும் நடக்கவில்லை. மோடி சுட்ட பல வடைகளில் இந்த வடையும் ஒன்று.

மீனவர்களுக்கான வாக்கு றுதியையாவது நிறை வேற்றினாரா? இலங்கை கடற்படையின் அராஜ கத்தை போக்குவோம் என் றார். தற்போது அந்த நிலை மாறிவிட்டதா நாளை (இன்று) நடக்கும் மீனவர்கள் மாநாட்டில் இது குறித்து விரிவாக பேசப்படும்.

மத்திய அமைச்சராக அருண்ஜெட்லி இருந்த போது சொன்ன மதுரை எய்ம்ஸ் திட்டம் செங்கலுடன் நின்றுவிட்டது. 9 வருடங்கள் கழித்து தற்போதுதான் டெண்டர் விட்டுள்ளனர். இதுவும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நாடகமா? என்பது தெரியவில்லை. பல ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரியை தமிழகத்திடம் இருந்து பெறும் மத்திய அரசுக்கு தனது நிதியில் இருந்து, மதுரையில் எய்ம்ஸ் கட்டித்தர மனமில்லை.

இப்போதுதான் சகோதரி கனிமொழி கூறிய சிலப்பதி காரத்தின் முன்னுரையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் படிக்க தொடங்கி இருப்பார் என்று தெரிகிறது. ஒன்றும் அவச ரமில்லை. முழுமை யாக படிக்க கால அவகாசம் உண்டு. மத்திய நிதி மந்திரி யின் கணவர் எழுதிய புத்த கத்தை மத்திய மந்திரிகள் அனைவரும் படிக்க வேண் டும். அந்த புத்தகத்தில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை காப் பாற்ற முடியாது என கூறப்பட்டுள்ளது. ஜெயலலி தாவின் சட்டமன்ற நாட கத்துக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் மத்திய நிதி மந்திரி, மணிப்பூர் சம்பவத்துக்கு ஏன் பதிலளிக்க மறுக்கிறார்?

மக்கள் நலனில் அக்கறை யில்லாத பிரதமர், உள்துறை மந்திரி தி.மு.க.வை விமர் சிக்கின்றனர். தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடிமையாக இருப்பது எடப்பாடி பழனி சாமிதான். நாங்கள் மாநில கட்சி தான். ஆனால் அனைத்து மாநில மக்களின் நலனுக்காக குரல் கொடுக் கும் ஒரே கட்சி தி.மு.க. தான். மக்கள் உரிமைகளை ஓங்கி ஒலித்து, நாடாளுமன் றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் குரல் கொடுத்து வருகின்ற–னர். நம்மை பின்பற்றி பிற மாநில எம்.பி.க்களும் தைரி–யமாக பேசுவது மத்திய அரசுக்கு கோபத்தை உண்டு பண்ணுகிறது. மக்களாட் சிக்கு தமிழகம் முன்னோடி யாக இருந்து 40 தொகுதி களிலும் தி.மு.க. வெற்றி பெறும்.

இதற்காகத்தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட் டுள்ளது. பா.ஜ.க.வின் அடக்கு முறைகளை பார்த்து பயப்படும் கட்சி தி.மு.க. அல்ல. தேர்தல் வெற்றிக் கான களப்பணியை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். உங்களை நம்பி நாடாளு மன்ற தேர்தல் களத்தை ஒப்படைத்துள் ளேன். உங்களது உழைப்புக் கான அங்கீகாரம் நிச்சயம் உண்டு என்று கலைஞரின் வழித் தோன்றலாக, உங்க ளில் ஒருவனாக நான் உறுதி கூறு கிறேன். நாற்பதும் நமதே, நாடும் நமதே. நன்றி.

இவ்வாறு அவர் பேசி னார்.

Tags:    

Similar News