உள்ளூர் செய்திகள்

ஊராட்சி செயலர்கள் 3-வது நாளாக போராட்டம்

Published On 2022-09-14 08:24 GMT   |   Update On 2022-09-14 08:24 GMT
  • திருப்புல்லாணி ஒன்றியத்தில் ஊராட்சி செயலர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • வேலைப்பழுவை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

கீழக்கரை

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில மையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளில் பணியாற்றும் கிராம ஊராட்சி செயலா்கள் கடந்த 12-ந்தேதி முதல் 3 நாள்கள் பணி விடுப்பு எடுத்து போராட்டத்தை தொடங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன் றியத்தைச் சேர்ந்த 33 ஊராட்சி செயலர்கள். தங்களது கோரிக்கைகளான ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை டி.என், பி.எஸ், சி. மூலம் நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலருக்கு வேலைப்பழுவை குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை மாவட்ட செயலாளர் முருகன் வழி நடத்தினார். மாவட்டத் துணைத்தலைவர் சேகு ஜலாலுதின், ஒன்றியத் தலைவர் ஜெயபால், செயலாளர் பழனிமுருகன், ஒன்றிய பொருளாளர் மங்களசாமி முன்னிலை வகித்தனர்.

Tags:    

Similar News