உள்ளூர் செய்திகள்

புதிய நகர்புற நலவாழ்வு மையம்

Published On 2023-06-07 08:06 GMT   |   Update On 2023-06-07 08:06 GMT
  • ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய நகர்புற நலவாழ்வு மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
  • கலெக்டர் விஷ்ணு சந்திரன் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதை பார்வையிட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சிக் குட்பட்ட லேதம்ஸ் பங்களா, பரமக்குடி சந்தை கடை தெரு, மஞ்சள்பட்டினம் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய அரசு நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள் ளன. இதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நலவாழ்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிகிச்சை அளிப்பதை பார்வை யிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு நலவாழ்வு மையத்திலும் தலா, ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவமனை பணியாளர் என பணிபுரிவார்கள். மேலும் இங்கு காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஆகிய நேரங்களில் 12 வகையான மருத்துவ சேவைகள், 14 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். மேலும் இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் தேவையான மருத்துவ சிகிச்சைகள் பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

இந்த திறப்பு விழாவில் முருகேசன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள்அர்ஜூன் குமார் (ராமநாதபுரம்), இந்திரா (பரமக்குடி), ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், நகர்மன்ற உறுப்பி னர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News