மவுன ஊர்வலத்தில் பங்கேற்ற ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க.வினர்.
எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
- பரமக்குடியில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் திடலை வந்தடைந்தனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தர்மர் எம்.பி. தலைமை தாங்கினார்.
பரமக்குடி நகர செயலாளர் வின்சென்ட் ராஜா முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர். படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்பு ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் திடலை வந்தடைந்தனர். அங்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர்-வக்கீல் நவநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செய லாளர் திசை நாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் முத்தரசு, பரமக்குடி நகர ஐ.டி.பிரிவு செயலாளர் ஜாவா பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் லாட.செல்வம், சுரேஷ், வாணியவல்லம் ஊராட்சி மன்ற தலைவர் நாகநாதன், வெங்கலக்குறிச்சி செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சிவா தேவன், வர்த்தக அணி செயலாளர் பாபு, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் விஜய் கார்த்திக், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.