உள்ளூர் செய்திகள்

பஸ் நிறுத்தத்தில் சுற்றி திரியும் மனநோயாளிகள்.

பஸ் நிறுத்தம், கடை வீதிகளில் சுற்றித் திரியும் மன நோயாளிகள்

Published On 2022-12-16 08:17 GMT   |   Update On 2022-12-16 08:19 GMT
  • பஸ் நிறுத்தம், கடை வீதிகளில் சுற்றித் திரியும் மன நோயாளிகள்யால் மாணவர்கள்-பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
  • ராமேசுவரம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு வரும் வடமாநிலத்தவர்கள் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட்டு சென்று விடுகின்றனர்.

அபிராமம்

அபிராமம் பகுதியில் பஸ் நிறுத்தம், கடை வீதிகளில் மனநோயாளிகள் சுற்றி திரிகின்றனர். மேலும் அவர்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும் நடந்து கொள்கின்றனர்.

பஸ் நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளுக்கும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் மனநோயாளிகள் நடந்து கொள்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், முதியோர் ஒருவித அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர்.

இதற்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வீடுகளில் சுற்றி திரிந்த மனநோயாளிகளை காப்பகத்தில் சேர்த்தனர். அந்த திட்டம் தொடர்ந்து பின்பற்றபடவில்லை. இதனால் தற்போது மனநோயாளிகள் மீண்டும் வீதிகளில் சுற்றி திரிகின்றனர்.

ராமேசுவரம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு வரும் வடமாநிலத்தவர்கள் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட்டு சென்று விடுகின்றனர். அவர்கள் தங்க இடமின்றி தெருவீதிகளில் சுற்றி திரியும் நிலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் பொதுமக்களுக்கும் அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த நிலையில் மனநோயாளிகள் தெரு வீதிகளில் சுற்றி திரியாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மனநலத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News