பட்டப்பகலில் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை
- பட்டப்பகலில் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.
பசும்பொன்
கமுதி அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பால தீபா (வயது 30). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மின் மீட்டர் பெட்டியில் சாவியை வைத்து விட்டு வயலுக்கு சென்று விட்டார்.
மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது போது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பால தீபா அபிராமம் போலீசில் புதார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்ற னர்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பஜாரில் உள்ள ஒய்.காம்ப்ளக்ஸில் குடியிருந்து வருபவர் பெரிய சங்கர் மகன் முத்துச் சாமி (வயது 28). இவர் தனது வீட்டின் சாவியை மாடிப்படியில் வைத்து விட்டு, காளீஸ்வரன் என்ப வரிடம் செல்போனை வாங்கி இவரது மனைவியி டம் பேசிவிட்டு வியாபா ரத்திற்கு சென்றுவிட்டாராம்.
மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்க பணம் திருடு போயிருந்தது.
இதுபற்றி முத்துச்சாமி காளீஸ்வரன் மீது முதுகுளத் தூர் போலீஸ் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.