உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவிகளின் கைவினை பொருட்களின் கண்காட்சியை பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் பார்வையிட்டார்.

கைவினை பொருட்கள் கண்காட்சி

Published On 2023-01-05 13:35 IST   |   Update On 2023-01-05 13:35:00 IST
  • கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
  • நூற்றுக்கணக்கான கலைநய படைப்புகள் கண்காட்சியை பார்வையிட வந்த பெற் றோர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

கீழக்கரை

கீழக்கரை இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளியில் மாணவ பிரம்மாக்களின் கலைத்திறனை வெளிச் சத்திற்கு கொண்டு வரும் வகையில் ஆண்டு தோறும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளின் கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்று வருவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக் கான கண்காட்சியில் மாணவ, மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் சளைத்த வர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஆர்வத்துடன் களம் இறங்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியை மிஞ்சும் வகை யில் மாணவர்கள் நூற்றுக் கணக்கான படைப்பு களை தயார் செய்து காட்சிப் படுத்தி இருந்தனர்.

பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம், இஸ்லாமியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், உயர் நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் முகமது முஸ்தபா ஆகியோர் கண்காட்சி யினை பார்வையிட்டு மாணவர் களின் தயாரிப்பு குறித்து கேட்டறிந்து பாராட்டினர். துணி, அட்டை, பேப்பர் களால் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கலைநய படைப்புகள் கண்காட்சியை பார்வையிட வந்த பெற் றோர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News