உள்ளூர் செய்திகள்

கைவினை பொருட்கள் கண்காட்சி

Published On 2023-01-01 08:13 GMT   |   Update On 2023-01-01 08:13 GMT
  • கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
  • இயக்குநர் சுப்புராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம்

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் ராமேசுவரம் வர்த்தகம் தெருவில் உள்ள ராஜராஜேசுவரி திருமண மகாலில் மாற்று திறனாளிகளால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் மற்றும் விற்பனை கண்காட்சி தொடக்க விழா நடந்தது. மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் குத்துவிளக்கேற்றி ஏற்றி தொடங்கி வைத்தார். சுமார் 50 ஸ்டால்களில் அமைக்கப்பட்டிருந்த கைவினை பொருட்கள், அழகு சாதன பொருட்களை பார்வையிட்டு விற்பணையை தொடங்கி வைத்தார்.

வருகிற 7-ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அதிகளவில் கைவினை பொருட்களை விற்பதற்கு அமைச்சகத்தின் பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் சென்னை மண்டல அதிகாரி பிரபாகரன், நாகர்கோவில் மாற்றுத்திறனாளி சேவை மைய உதவி இயக்குநர் ரூபசந்திரன், பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News