உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க சென்ற முதியவரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி

Published On 2023-10-19 08:31 GMT   |   Update On 2023-10-19 08:31 GMT
  • ராமநாதபுரத்தில் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க சென்ற முதியவரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மூலக் கொத்தளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (61). இவர் ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வந் தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பெயர் முகவரி தெரியாத நபர் பணம் எடுத்து தருவதாக கூறியதையடுத்து கார்டை கொடுத்து பணம் ரூ.20,000 எடுத்து தருமாறு சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அந்த நபர் கார்டை மெசினில் சொருகி விட்டு பணத்தை டைப் செய்ததாகவும், சுப்பிரமணியன் ரகசிய எண்ணை பதிவு செய்துள்ளார். அப்போது பணம் வரவில்லை எனக் கூறி அந்த நபர் ஏற்கனவே வைத்திருந்த ஒரு போலியான ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு சென்று விட்டார். பின்பு சுப்பிரமணியன் அரண்மனை பகுதியில் இருந்தபோது அவரது செல் போனிற்கு ரூ.42,000 பணம் எடுத்திருப்பதாக குறுந்தக வல் வந்தது.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News