உள்ளூர் செய்திகள்

'என் மண் என் மக்கள்' நடைபயணம் தமிழகத்தில் தாமரை மலர உறுதுணையாக அமையும்

Published On 2023-07-28 08:36 GMT   |   Update On 2023-07-28 08:36 GMT
  • ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் தமிழகத்தில் தாமரை மலர உறுதுணையாக அமையும்.
  • மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள் நடைபயணமானது தமிழகத்தில் தாமரை மலர உறுதுணையாக அமையும் என்று ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் தரணி ஆர்.முருகேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயண திட்டத்தை அறிவித்துள்ளார்.இந்த நடைபயணம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு அண்ணாமலையின் நடைபயணத்தை மாலை 5.45 மணிக்கு விழா நடைபெறும் இடத்தில் தொடங்கி வைக்கிறார்.முன்னதாக அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.இன்று நடைபயணம் தொடங்கும் அண்ணாம லை,ராமேசுவரம் நகருக்குள் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். முதல் நாள் பயணத்தை ராமேசுவரத்தில் முடிக்கும் அவர் இரவு ராமேசுவரத்திலேயே தங்குகிறார்.நாளை (29-ந்தேதி) காலை ராமேசுவரத்தில் இருந்து நடைபயணம் புறப்படும் அண்ணாமலை தங்கச்சிமடம்,பாம்பன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அவர் பொதுமக்களை சந்தித்துவிட்டு இரவு ராமநாதபுரத்தில் தங்குகிறார்.நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.எனது தலைமையிலான ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நடை பயண தொடக்க நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.மத்திய அமைச்சர் உள்ளிட்ட பா.ஜ.க.வினரை வரவேற்ப தற்காக ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க. கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன. விழா மேடை யானது பாராளுமன்ற கட்டிடத்தை போன்று வடிவமைக்கப் பட்டுள்ளது. மத்திய அமைச்சர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீண்டும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வரை மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.இந்த நடைபயணமானது தமிழ கத்தில் தாமரை மலர ஏதுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.தமிழக மக்கள் இந்த நடை பயணத்தில் பங்கேற்று பா.ஜ.க.விற்கு முழு ஆதரவையும் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News