உள்ளூர் செய்திகள்

உடல் முழுவதும் சேறு பூசி கோவிலுக்கு வந்த பக்தர்கள்.

பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி வினோத நேர்த்திக்கடன்

Published On 2023-08-06 12:30 IST   |   Update On 2023-08-06 12:30:00 IST
  • பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
  • விழாவிற்கான ஏற்பாடு களை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலின் ஆடி திருவிழா கடந்த 28-ந் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு தினமும் விஷேச பூஜை மற்றும் அபி ஷேம் அலங்காரம் நடை பெற்று வந்தது. பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் விரதமிருந்து அம்மனை வழிபட்டனர். பின்னர் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்ட னர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய விடிய நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பெண், ஆண் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அக்கினி சட்டியின்போது பெண்கள் ஓம்சக்தி என கோஷம் போட்டு கைகளை உயர்த்தி பக்தி பரவசத் துடன் ஆடிச் சென்றனர். மேலும் 21 சட்டி மற்றும் 51 சட்டி, பால்குடம், ஆயிரம் கண்பானை என ஏராள மான நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் 100-க்கும் மேற்பட்ட ஆண், பக்தர்கள் உடல் முழுவதும் அடையா ளம் தெரியாத அளவில் களிமண் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு ஊர் எல்லையில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து மேள தாளத்துடன் நடனமாடி ஊரை நகர் வலம் வந்து சக்திமாரியம் மனை வழிபட்டனர்.

இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதி யில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சக்தி மாரியம் மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News