உள்ளூர் செய்திகள்

 தொண்டி அருகே வீரசங்கிலி மடம் கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலில் நீராடினர்

சேதுக்கரை கடலில் புனித நீராடிய பக்தர்கள்

Published On 2022-07-28 07:49 GMT   |   Update On 2022-07-28 07:49 GMT
  • சேதுக்கரை கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.
  • இதே போல் தேவிபட்டினம் நவபாசானத்திற்கும் ஏராளமான பக்தர்கள் சென்று புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம்

தமிழ் மாதங்களில் அனைத்து மாதங்களிலும் அமாவாசை வந்த நிலையிலும் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு. தை, ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை புனிதமாக கருதுகின்றனர். இதன் காரணமாக இந்த அமாவாசை நாட்களில் புண்ணிய தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை இந்துக்கள் புண்ணியமாக கருதுகின்றனர். அன்றைய தினம் பிதுர்பூஜை செய்வ தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன், குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும் என்பது ஐதீகம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேசுவரம், திருப்புல்லாணி (சேதுக்கரை) தேவிபட்டிணம் (நவபாசனம்) மற்றும் மாரியூர், மூக்கையூர் (சாயல்குடி) என முக்கிய கடற்கரை புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன.

ஆடி அமாவாசையான இன்று திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடலில் புனித நீராடுவதற்கு அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர்.

இதனால் கடலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. புனித நீராடிய பின் பக்தர்கள் அங்குள்ள ஆஞ்சநேயர் சாமி கோயிலில் வழிபட்டனர்.

பின்னர் 108 வைணவ தலங்களில் 44-வது திவ்யதேசமாக உள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் சாமி கோவிலில் தை அமாவாசை தினத்தில் வழங்கப்படும் பாயாசத்தை குடித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

இதனால் சேதுக்கரை தரிசனத்தை முடித்து வந்த பக்தர்கள் ஆதிஜெகநாத பெருமாள் சாமி கோவிலில்; நீண்ட வரிசையில் காத்திருந்து மடப்பள்ளி வளாகத்தில் வழங்கப்பட்ட பாயாசத்தை பய பக்தியுடன் வாங்கி குடித்து சாமி தரிசனம் செய்தனர். இதே போல் தேவிபட்டினம் நவபாசானத்திற்கும் ஏராளமான பக்தர்கள் சென்று புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

தொண்டி அருகே வீரசங்கிலி மடம் கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் முன்னோர்க ளுக்கு தர்ப்பணம் செய்யும் வகையில் கடலில் புனித நீராடினர்.

இதேபோல் ஆர்.எஸ்.மங்களம், தேவகோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளிலிருந்து வந்து தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் பகுதியில் உள்ள கடலிலும் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

Tags:    

Similar News